ஹென்ரி கிஸ்ஸிங்கர் 100 ஆவது வயதில் காலமானார்

அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் காலமானார்

by Staff Writer 30-11-2023 | 11:24 AM

Colombo (News 1st) அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹென்ரி கிஸ்ஸிங்கர்(Henry Kissinger) தனது 100 ஆவது வயதில் காலமானார்.

அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1923ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த ஹென்ரி கிஸ்ஸிங்கர், 1938 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார்.

ஹென்ரி கிஸ்ஸிங்கர் 3 ஆண்டுகள் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளரின் இழப்பை தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்