புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு..

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று

by Staff Writer 07-05-2025 | 5:14 PM

Colombo (News1st)புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக கர்தினால்கள் வத்திக்கானில் ஒன்றுகூடியுள்ளனர்.

வத்திக்கானிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் புதிய பாப்பரசர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று(07) ஆரம்பமாகின்றது.

உலகளாவிய ரீதியில் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசரை தெரிவு செய்யவுள்ளனர்.

இன்று(07) நடைபெறும் வாக்கெடுப்பில் கர்தினால் ஒருவர் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றால் அவர் அடுத்த பாப்பரசராக அறிவிக்கப்படுவார்.

பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டால் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வௌ்ளை புகையும் தெரிவு செய்யப்படவில்லை எனில் கறுப்பு புகையும் வௌியேறும்.