.webp)
Colombo (News 1st) சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.
தேவையானளவு உரம், நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார்.
10,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், டிசம்பர் மாதத்திற்குள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் தற்போது 60,000 மெட்ரிக் தொன் உரம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திடம் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கையிருப்பிலுள்ளது.
தனியார் துறையினரிடம் 60,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 2000 மெட்ரிக் தொன் SSP உரம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.