பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

by Bella Dalima 07-07-2022 | 4:43 PM
Colombo (News 1st) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்க தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா நிராகரித்துள்ளார். நாளையும் (08) நாளை மறுதினமும் (09) கோட்டையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் எதிர்ப்பில் ஈடுபடுவோர் பிரவேசிக்க தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த இந்த கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் அதனை நிராகரித்துள்ளார். குற்றச்செயல் இடம்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரங்கள் உள்ளதால், குறித்த கோரிக்கையை நிராகரிப்பாக நீதவான் அறிவித்துள்ளார்.