.webp)
Colombo (News 1st) வவுனியா - பண்டாரிக்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இன்று(30) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் உதவியுடன் மாநகர சபை தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
விளக்கிற்கு தேங்காய் எண்ணெய் என நினைத்து தவறுதலாக பெட்ரோலை ஊற்றியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.