ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல்

by Staff Writer 21-01-2022 | 3:18 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி CID இன் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.