ஹஜ் கடமையை நிறைவேற்ற 3500 பேருக்கு வாய்ப்பு

இம்முறை ஹஜ் புனிதக் கடமையை நிறைவேற்ற 3500 பேருக்கு வாய்ப்பு

by Staff Writer 16-01-2019 | 5:52 PM
Colombo (News 1st) இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 3500 பேருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் M.H. அப்துல் ஹலீம் தெரிவித்தார். சவுதி அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளதாக அமைச்சர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார். கடந்த வருடம் 3000 இலங்கையருக்கே புனிதக் கடமையை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் M.H. அப்துல் ஹலீம் சவுதிக்கு சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.