சுகீஷ்வர பண்டாரவை பிணையில் விடுவிப்பு

சுகீஷ்வர பண்டாரவை பிணையில் விடுவிப்பு

by Staff Writer 18-11-2026 | 2:40 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டாரவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் பசன் அமரசேன இன்று(18) உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செலவின தலைப்பின் கீழ் உள்ள நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப்பிணைகள் மற்றும் 05 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஜூலை 14 முதல் 2024 21 திகதி வரையான காலப்பகுதியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளராகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட செயற்திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றி, ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்று நிதி முறைகேடு செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு கடந்த ஜூன் 18ஆம் திகதி மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.