அதி அபாய மட்டத்தை அடையும் டெங்கு நிலைமை

அதி அபாய மட்டத்தை அடையும் டெங்கு நிலைமை

by Staff Writer 17-11-2026 | 11:55 AM

COLOMBO (News 1st) எதிர்வரும் வாரங்களில் டெங்கு நிலைமை, அதி அபாய மட்டத்தை அடையக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களின் 140 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். 

பூச்சியியல் ஆய்வுகளின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 109,722 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர்.