ஒருதொகை போதைப்பொருள் கைப்பற்றல்

2025 ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 109 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு

by Staff Writer 25-10-2026 | 11:16 AM

COLOMBO (News 1st) கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 109 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

முழுநாடும் ஒன்றாக தேசிய செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக அவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இந்த சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளன.

கடற்படையால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 2,641 கிலோ 403 கிராம் ஐஸ்,

1944 கிலோ 257 கிராம் ஹெரோயின், 

256 கிலோ 200 கிராம் கொக்கெய்ன், 

65 கிலோகிராமுக்கும் அதிக ஹஷீஷ், 

86,126 கிலோ மற்றும் 51 கிராம் பீடி இலைகள், 

4 மில்லியனுக்கும் அதிகமான போதை வில்லைகள்,

1548 கிலோ 702 கிராம் கேரள கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் அடங்குகின்றன.

இதனிடையே, மாத்தறை - தலல்ல, நாஒட்டுன்ன கடற்கரையில் 561 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றின் பெறுமதி 11.8 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.