.webp)

Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் அவர் வகித்த குருணாகல் பிரதான அமைப்பாளர் பதவி, கட்சியின் பிரதிச் செயலாளர், ஐக்கிய ஊழியர் சங்கத்தின் தலைவர், எதிர்க்கட்சி தலைவரின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு செயலாளர், செயற்குழு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவிகளிலிருந்தும் இன்று(12) முதல் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் எதிர்க்கட்சியின் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்படும் திட்டத் தேவையென சுட்டிக்காட்டிய அசோக் அபேசிங்க, அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சாதகமான தலையீடு காணப்படவில்லை என தெரிவித்தார்.
அதன் காரணமாகவே தாம் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
