இந்திய பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி சந்திப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி டெயே இன்று சந்திப்பு

by Staff Writer 09-09-2026 | 9:57 AM

Colombo (News 1st) நாட்டிற்கு விஜயம் ​மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.


இதனையடுத்து இந்திய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பும் நடைபெறவுள்ளது.


அவர் நாளை(10) காலை நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே 03 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.