சமூக சக்தி கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள்

சமூக சக்தி கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழான 15,000 வேலைத்திட்டங்களை இவ்வருடம் நிறைவு செய்ய திட்டம்

by Staff Writer 05-09-2026 | 1:52 PM

Colombo (News 1st)  சமூக சக்தி கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழான 15,000 வேலைத்திட்டங்களை இந்த வருடம் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். 
இந்த வேலைத்திட்டங்களுக்காக அமைச்சினால் 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 
நாட்டிலுள்ள அனைத்து கிராம அலுவலகர் பிரிவுகளிலும், கிராம அபிவிருத்தி குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு அதனூடாக சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
வருடத்தின் முதல் 06 மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட சமூக சக்தி கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழான வேலைத்திட்டங்களில் 50 % முன்னேற்றம் காணப்படுவதாகவும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே குறிப்பிட்டார். 

ஏனைய செய்திகள்