.webp)
-559816.jpg)
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 07 முதல் ஒக்டோபர் 07 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தொடரில் உலகளாவிய மனித உரிமைகள், சிவில், அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வௌியிடவுள்ளது.
