மஹில் சேனாரத்ன கைது

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மஹில் சேனாரத்ன கைது

by Staff Writer 18-08-2026 | 4:15 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இளைய சகோதரரும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான மஹில் சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


2010 முதல் 2012-இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றிய போது, நாடளாவிய ரீதியில் மீன் சந்தைகளின் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு பணிகளில், முறையான கொள்முதல் செயன்முறையை பின்பற்றாமல், நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 2 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்தமை மற்றும் அந்த நிறுவனங்களுக்கு பணம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரான மஹில் சேனாரத்ன கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய செய்திகள்