.webp)
-557950.jpg)
Colombo (News 1st) 20 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளுடன் கனேடிய பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டாரிலிருந்து இன்று(26) அதிகாலை நாட்டிற்கு வந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கனடாவின் டொரன்டோ நகரில் போதைப்பொருளை கொள்வனவு செய்த சந்தேகநபர் கட்டாரிற்கு பயணித்து அங்கிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
சந்தேகநபர் 2 பயணப்பொதிகளில் போதைப்பொருளை மறைத்துவைத்து நாட்டிற்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
27 வயதான கனேடிய பிரஜையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
