.webp)
-557878.jpg)
Colombo (News 1st) 2024 முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 364 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே இவை முடக்கப்பட்டுள்ளன.
அவற்றில் வாகனங்கள், காணிகள், தங்கம் மற்றும் பணம் ஆகியவை அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தமது உழைப்பால், சட்டபூர்வமான வியாபாரங்கள் மூலம் பணம் மற்றும் சொத்துக்களை ஈட்டிய பொதுமக்களுக்கு இதனால் எந்தவொரு இடையூறும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
