.webp)

Colombo (News 1st) தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தனது 73 ஆவது வயதில் இன்று(27) காலமானார்.
அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1953 ஜனவரி 07ஆம் திகதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
பின்னர் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் 'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு' உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை உருவாக்கியவர்.
