நாளைமுதல் பதுளை - நானுஓயா ரயில் சேவை

பதுளையிலிருந்து அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் நாளை முதல் நானுஓயா வரை நீடிப்பு

by Staff Writer 19-06-2026 | 8:16 PM

Colombo (News 1st) டித்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக ரயில் மார்க்கம் ரயில்வே திணைக்களத்தின் கடின உழைப்பினால் மீண்டும் புத்துயிர் பெற்றுவருகின்றது.

இதன் ஓர் அங்கமாக நானுஓயா முதல் பதுளைக்கான ரயில் சேவை நாளை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

டித்வா புயலின் தாக்கம் மலையக ரயில் மார்க்கத்தில் எதிரொலித்த நிலையில் மத்திய மலைநாட்டுக்கான ரயில் சேவைகள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.

டித்வா சூறாவளியால் கடும் சேதமடைந்த பதுளைக்கும் அம்பேவலைக்கும் இடையிலான ரயில் சேவை 23 நாட்கள் கடும் பிரயத்தனத்தின் பின்னர் கடந்த ஜனவரி 20 திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து பதுளைக்கும் அம்பேவலவுக்கும் இடையிலான ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் 20 கிலோமீற்றர் தூரம் கொண்ட நானுஓயா பதுளைக்கான ரயில் சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்