.webp)
-556748.jpg)
Colombo (News 1st) 2026 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் அதிகாரபூர்வ ஔிபரப்பு உரிமை சிரச ஊடக வலையமைப்பு வசமானது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையகத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், MTV பிரதம நிறைவேற்று அதிகாரி யசரத் கமல்சிறி, பியோ டிவி பிரதம நிறைவேற்றதிகாரி ருசிர வீரகோன், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார், MBC நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி புத்தி விக்கிரமநாயக்க, நியூஸ் ஃபெஸ்ட்டின் MBC விற்பனைப் பிரிவின் முகாமையாளர் ரொஷான் வட்டவல மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் அமெரிக்காவில், கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
