.webp)

Colombo (News 1st) வவுனியா - கனகராயன்குளம், ஏ9 வீதியில் நேற்றிரவு(02) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புளியங்குளம் நோக்கி பயணித்த கார் மோதியதில் பாதசாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராயன்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 40 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்தின் போது குறித்த காரின் பின்னால் பயணித்த வேனும் காருடன் மோதி விபத்திற்குள்ளான நிலையில் வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதனிடையே, வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்திற்குள் சிக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறிசுட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியிலுள்ள கோயிலொன்றின் காணியை துப்புரவு செய்து கொண்டிருந்த போது, உழவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை பழுதுபார்த்த வேளையிலேயே உழவு இயந்திரத்தின் சக்கரத்திற்குள் சிக்கி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
