.webp)
-617142-556589.jpg)
Colombo (News 1st) பல்லேகம ஹேமரத்தன தேரர் வகித்த "நுவர கலாவியே பிரதம சங்கநாயக்கர்" பதவியிலிருந்து அவரை தற்காலிகமாக இடைநிறுத்த மல்வத்து பீடத்தின் சங்க சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய அட்டமஸ்தானாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக ருவன்வெலிசாயவின் ச்சைத்யராமதிகாரி எத்தலேவடுனுவெவே ஞானதிலக தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்திய மல்வத்து பீடத்தின் சங்க சபை, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளது.
பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, அது குறித்த இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை தற்போதைய தீர்மானம் நடைமுறையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்வத்து பீட சங்க சபையின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரின் அனுமதியுடன் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
