.webp)

Colombo (News 1st) வனவாசல ரயில் விபத்தின் காரணமாக ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு சுமார் 17 இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக சுமார் 200 அடி தூரத்திற்கு ரயில் தண்டவாளங்கள், ஸ்லீப்பர்கள் சேதமடைந்துள்ளதாக திணைக்களத்தின் பாதைகள் மற்றும் வேலைகள் உப திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சேதமடைந்த குறித்த பகுதிகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
