இனியபாரதியுடன் தொடர்புடைய இருவரும் தடுத்துவைப்பு

இனியபாரதியுடன் தொடர்புடைய இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

by Staff Writer 27-04-2026 | 10:21 PM

Colombo (News 1st) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான இனியபாரதி என அழைக்கப்படும் கே.புஷ்பகுமாருடன் தொடர்புடைய  இருவரையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் ஏறாவூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவிந்திரநாத் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை, மனித கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய சந்தேகநபர்கள் நேற்று(26) கைது செய்யப்பட்டனர்.

இனியபாரதியும் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.