காற்றின் தரத்தில் வீழ்ச்சி

நாட்டில் பல பிரதேசங்களில் காற்றின் தரத்தில் வீழ்ச்சி

by Staff Writer 28-02-2026 | 5:38 PM

COLOMBO(News1st) - நாட்டில் பல பிரதேசங்களில் காற்றின் தரம் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. 

தெற்காசிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் மாசடைந்த காற்றின் தாக்கத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று மாசு முகாமைத்துவ பிரிவின் பிரதான நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்தார். 

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் கோட்டை பிரதேசத்தில் அதன் தரக்குறியீடு 127 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அனுராதபுரத்தில் 76 புள்ளியாகவும், தம்புள்ளையில் 71 புள்ளியாகவும், காலியில் 69 புள்ளியாகவும் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அத்துடன், பதுளை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கேகாலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (28) காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று மாசு முகாமைத்துவ பிரிவின் பிரதான நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.