நிலக்கரியின் தரம் தொடர்பில் ஆராய குழு

நிலக்கரியின் தரம் தொடர்பில் ஆராய குழு

by Staff Writer 24-02-2026 | 9:07 PM

Colombo (News 1st) நிலக்கரியின் தரம் மற்றும் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மொறட்டுவை மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் அடங்குகின்றனர்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கான தற்போதைய நிலக்கரி விநியோகத்தை ஆய்வு செய்து ஒருமாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 07 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் மின் பொறியியல் பேராசிரியர் W.D.A.S.ரொட்ரிகோ இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்