சட்டத்தை பின்பற்றாத அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி சட்டத்தை பின்பற்ற தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை - பிரதி பொலிஸ் மாஅதிபர் W.P.J.சேனாதீர

by Staff Writer 19-02-2026 | 6:52 AM

Colombo (News 1st) அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி இன்றி வாகனங்களை அனுமதிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் W.P.J.சேனாதீர தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களில் அவற்றை பொருத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதிவேக வீதிகளில் உள்ள 31 நுழைவாயில்களிலும் இந்த நடைமுறையை கடுமையாக பின்பற்றுவதற்கு அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் W.P.J.சேனாதீர தெரிவித்தார்.