விவசாய ஓய்வூதியத்தை இடைநிறுத்த தீர்மானம்

06 மாதங்களுக்கு மேல் விவசாய ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளாதவர்களின் கொடுப்பனவை இடைநிறுத்த தீர்மானம்

by Staff Writer 19-02-2026 | 8:12 AM

Colombo (News 1st) தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு மேலதிகமாக விவசாய ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளாதவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கமநல மற்றும் கமநல சேவைகள் காப்புறுதி சபை ஊடாக வருடாந்தம் 79,215 விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

அத்துடன் 6,381 மீனவர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

இவர்களில் சுமார் 6,105 பேர் 06 மாதங்களுக்கு மேலதிகமாக ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஏற்படக்கூடிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழலை தடுக்கும் நோக்கில் அவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 1918 என்ற துரித இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.