முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

by Staff Writer 18-02-2026 | 10:39 PM

சமன்Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க நாளை மறுதினம்(20), குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற புலனாய்வு விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு இன்று(28) அறிவித்தார்.

166 இலட்சம் ரூபா பொதுச் சொத்தை முறைகேடாகப் பயன்படுத்தி இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர் சார்பில் ​ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை தெரிவித்தார்.

வழக்கின் 02ஆவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்கவின் பிணை உத்தரவை அறிவிப்பதற்காக வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிணை உத்தரவை அறிவித்த நீதவான், 02ஆவது சந்தேகநபர் குற்றவியல் நோக்கத்துடன் செயற்பட்டுள்ளமை நீதிமன்றத்தால் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தின் முன் சகலரும் சமனானவர்கள் என்பதால் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.