SM.ரஞ்சித்திற்கு எதிரான வழக்கு ஏப்ரலில் விசாரணை

வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித்திற்கு எதிரான வழக்கு ஏப்ரலில் விசாரணை

by Staff Writer 18-02-2026 | 10:26 PM

Colombo (News 1st) வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித்திற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

2012 செப்டம்பர் 27 முதல் 2014 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் எஸ்.எம்.ரஞ்சித் வட மத்திய மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய போது, எரிபொருள் சலுகை வழங்கப்பட்டிருந்த போதும் சட்டவிரோதமாக எரிபொருளை பெற்றுக்கொண்டதன் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டது.