புனித ரமழான் மாதம் இன்றுடன்(18) ஆரம்பமாகின்றது.

புனித ரமழான் மாதம் இன்றுடன்(18) ஆரம்பமாகின்றது.

by Staff Writer 18-02-2026 | 10:27 PM

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டுள்ளதால் ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் மாதம் இன்றுடன்(18) ஆரம்பமாகின்றது.

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார பிரதிநிதிகள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.