.webp)

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரரான 'தீகல சமன்' என அழைக்கப்படும் மஹாமாலகே அஜித் பெரேராவின் 02 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தலால் ஈட்டப்பட்ட பணம் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
