.webp)

COLOMBO (News1st) அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகங்களுக்காக தொடர்ந்தும் நிவாரணம் வழங்குவதற்காக நிதியமைச்சின் செயலாளரால் புதிய சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட சிறிய மற்றும் நுண் வர்த்தகங்களுக்காக ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் 2 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.
பிரதேச செயலகங்களில் வர்த்தகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட சிறிய மற்றும் நுண் வர்த்தகங்களுக்கும் இந்த கொடுப்பனவு உரித்தாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர கட்டடத்தில் இயங்கும் பதிவு செய்யப்படாத உள்ளக வணிகங்களுக்காக 50,000 ரூபா ஒருதடவை மாத்திரம் செலுத்தப்படும் கொடுப்பனவை வழங்கவும் நிதியமைச்சு வௌியிட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்படாத தயாரிப்பு கைத்தொழில்கள் மற்றும் பசுமை இல்லங்களுக்காகவும் 50,000 ரூபா கொடுப்பனவு செலுத்தப்படவுள்ளது.
இந்த சுற்றறிக்கை, பேரிடரால் பாதிக்கப்பட்ட நடைபாதை மற்றும் நடமாடும் உள்ளிட்ட தற்காலிக வர்த்தகத்திற்கும் 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
