.webp)

Colombo (News 1st) கம்பஹா குற்ற விசாரணை பிரிவின் 06 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க அருட்தந்தையொருவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த 06 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
கம்பஹா குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் நேற்றிரவு(24) கிரிந்திவிட்ட பகுதியில் இருந்து உடுகம்பொல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்த கட்டளையிடப்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் கட்டளையை மீறி பயணித்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்த அதிகாரிகள் அதனை நிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்போது அதில் இருந்த 33 வயதான குறித்த அருட்தந்தையை கைது செய்ததன் பின்னர் இருதரப்பினருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் தம்மை தாக்கியதாகக் கூறி குறித்த அருட்தந்தை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய சந்தேகத்தின் அடிப்படையில் கம்பஹா குற்ற விசாரணை பிரிவின் 06 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
