.webp)

Colombo (News 1st) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 140 கிலோமீட்டர் மைல்கல்லுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசொகுசு கார் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காரின் உரிமையாளர் தொடர்பில் வௌிக்கொணரப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.
அபரெக்க அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு(25) குறித்த காரை கண்டுபிடித்து மேலதிக விசாரணைக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைவிடப்பட்டிருந்த காரை திறந்து சோதனையிட்ட போது அதற்குள் நாட்குறிப்பேடு மற்றும் சான்றிதழ் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நாட்குறிப்பேட்டிலிருந்த அடையாள அட்டையில் பொத்துஹெர பகுதியிலுள்ள நபரின் பெயரும் முகவரியும் காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
