69,318 சந்தேகநபர்கள் கைது

முழு நாடும் ஒன்றாக சுற்றிவளைப்பில் 69,318 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 15-01-2026 | 8:16 PM

முழு நாடும் ஒன்றாக சுற்றிவளைப்பின் கீழ் 69,318 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு வகையான நச்சுப் போதைபொருட்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட 69,960 சுற்றிவளைப்புக்களின் போது  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களுள் 1446 பேருக்கு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 58 சந்தேகநபர்கள் மீது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்ட 1384 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நச்சுப் போதைப்பொருட்களின் பரவலினால் ஏற்படும் சுகாதாரம், சமூக பொருளாதார சீரழிவை தடுப்பதற்கும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்றிட்டம் கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது.