.webp)
-608631-553060.jpg)
Colombo (News 1st) மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் 50 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(15) நடைபெற்றது.
புதிய காற்றாலை மின் திட்டம் 10 காற்றாலை விசையாழிகளைக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை மார்ச் 2027 இல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனூடாக உற்பத்தி செய்யப்படும் ஓரலகு மின்சாரத்தை 14.37 இலங்கை ரூபாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
நாட்டை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் பலப்படுத்துவதுடன் பிரதேச மக்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் நன்மைகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இதன்போது தெரிவித்தார்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் பின்னணியில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதே உண்மையில் தமது தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி வரலாற்றில் மிகக் குறைந்த விலையில் ஒரு அலகு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்ட முதல் திட்டம் இதுவென என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
