500 பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

by Staff Writer 05-01-2026 | 12:35 PM

COLOMBO (News 1st) - வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாமென பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தினார்.

பஹலகமவிலுள்ள இலங்கை பொலிஸ் அகடமி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வில் நேற்று(04) பங்கேற்ற போதே பொலிஸ் மாஅதிபர் இதனை தெரிவித்தார்.

ஊழல் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் சிறந்த பொலிஸ் உத்தியோகத்தர்களாக முன்னேற வேண்டுமெனவும் பொலிஸ் மாஅதிபர்  வலியுறுத்தினார்.

இதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுக்காக சுமார் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒரு குழுவை பணிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.