ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன் விளக்கமறியலில்..

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன் விளக்கமறியலில்..

by Staff Writer 05-01-2026 | 7:14 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன் ஜெரம் கெனத் பெர்னாண்டோ ஆகியோர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி குற்ற விசாரணை பிரிவு விடுத்த அழைப்பிற்கமைய வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலையான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரின் மகன் ஜெரம் கெனத் பெர்னாண்டோ ஆகியோர் இன்று(05) முற்பகல் கைது செய்யப்பட்டனர்.

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோவும் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவருக்கு உதவிய குற்றச்சாட்டில் சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, அமரசேகர மாவத்தையில் இயங்கும் நிறுவனமொன்று தொடர்பாக 2015 நவம்பர் மாதத்தில் நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு  கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.