குஷ் போதைப்பொருளுடன் 03 இந்திய பிரஜைகள் கைது

500 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 03 இந்திய பிரஜைகள் கைது

by Staff Writer 06-01-2026 | 6:56 PM

Colombo (News 1st) 500 மில்லியன் ரூபா பெறுமதியான 50 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் 03 இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று(06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் உட்பிரவேச வளாகத்திலிருந்து தப்பியோட முயன்ற போது கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.

தாய்லாந்து - பேங்கொக்கிலிருந்து இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.