மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம்

வைத்தியசாலைகள், மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

by Chandrasekaram Chandravadani 30-12-2025 | 3:14 PM

Colombo (News 1st) வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிடம் காணப்படும் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதியமைச்சர் ஹங்சக விஜயமுனி தெரிவித்தார்.

மருந்துகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

மருந்துகளை இறக்குமதி செய்யும் போது மாதிரிகளை பரிசோதித்து அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகள் காணப்படுவதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனினும் குறித்த மருந்துகள் நாட்டின் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட பின்னர் அவற்றின் மாதிரிகளைப் பரிசோதிக்கும் நடைமுறை இதுவரை காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

சுமார் 1500 வகையான மருந்துகள் ஒரு இலட்சம் வரையான வர்த்தகப் பெயர்களில் நாட்டின் மருந்தகங்களில் உள்ளமை இதில் காணப்படும் சிக்கலாகும் என அவர் கூறினார்.

இந்தநிலையில் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் அவற்றின் தரத்தை உறுதி செய்யும் வகையில் குறித்த மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று அரசாங்கத்தின் பல்வேறு ஆய்வுகூடங்களின் ஊடாக அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹங்சக விஜயமுனி தெரிவித்தார்.