.webp)
-552391.png)
COLOMBO (News 1st)
2009ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையிலுள்ள 06 கைதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட மாஅதிபரின் உத்தரவிற்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
2009 ஏப்ரல் 15ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 06 கைதிகள் உயிரிழந்ததுடன், 04 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
