ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிக்க தீர்மானம்

ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிக்க தீர்மானம்

by Staff Writer 08-12-2025 | 4:57 PM

Colombo (News 1st) ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்காக இந்த செயலணி நியமிக்கப்படவுள்ளது.

அரச பொறிமுறையை பயன்படுத்தி மிகவும் வினைத்திறனான மற்றும் வௌிப்படையான வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலணியை நியமிப்பதற்கான அமைச்சரவை அனுமதி தற்போது கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படவுள்ளது.