4 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

கண்டி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

by Chandrasekaram Chandravadani 07-12-2025 | 7:02 PM

Colombo (News 1st) கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் பாததும்பர, பாதஹேவாகெட்ட, ஹாரிஸ்பத்துவ, தொலுவ, தும்பனே, பூஜாபிட்டிய, உடுநுவர, கங்கவட்ட கோரளை, அக்குறணை, மினிபே, உடபலாத, ஹதரலியத்த, குண்டசாலை, பன்வில, மெததும்பர, உடதும்பர, தெல்தொட்ட, பஸ்பாகே கோரளை, யட்டிநுவர, கங்கஇஹல கோரளை

கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டி, மாவனெல்ல, அரநாயக்க, கலிகமுவ, வரக்காபொல, கேகாலை, எட்டியாந்தோட்டை, ரம்புக்கனை

குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம, அலவ்வ, மாவத்தகம, மல்லவபிட்டிய, பொல்கஹவெல

மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை, வில்கமுவ, லக்கல, பல்லேகம, அம்பன்கங்க கோரளை, உக்குவெல, மாத்தளை, நாவுல, பல்லேபொல, யட்டவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்