.webp)
-551848.jpg)
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை இன்று(07) காலை தனது 98ஆவது வயதில் இந்தியாவில் இயற்கை எய்தினார்.
1927ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27ஆம் திகதி பிறந்த செல்லையா இராஜதுரை அரசியல்வாதியாக, எழுத்தாளராக, சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார்.
1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த செல்லையா இராஜதுரை இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டார்.
அன்னார் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது மேயராகவும் பதவி வகித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை தமிழகத்தில் வசித்து வந்த நிலையில் இன்று காலை தனது 98ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
