.webp)
-603081-550829.jpg)
Colombo (News 1st) நிதியமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இன்று(04) கைது செய்யப்பட்டார்.
உரிய நடைமுறையை மீறி 2015ஆம் ஆண்டில் எந்தவொரு அவசியமும் இன்றி அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 9 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை செலவிட்டு 50 தற்காலிக நெல் களஞ்சியங்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
