.webp)

Colombo (News 1st) வத்திக்கான் வௌிவிவகார அமைச்சர், பேராயர் Paul Richard Gallagher உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(03) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
பேராயர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
நாட்டிற்கு வருகை தந்த பேராயர் Paul Richard Gallagher-ஐ வௌிவிவகார மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது பேராயர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் சேதமடைந்த தேவாலயங்கள் உள்ளிட்ட நாடு முழுவதுள்ள கலாசார மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த தலங்களுக்கும் பேராயர் Paul Richard Gallagher விஜயம் செய்யவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் வத்திக்கான் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வு கொழும்பில் நடைபெறவுள்ளதுடன் இதில் பேராயர் விசேட பிரசங்கம் நிகழ்த்தவுள்ளார்.
