.webp)

Colombo (News 1st) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 03 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இந்திய அரசின் அழைப்பிற்கிணங்க எதிர்க்கட்சி தலைவர் இந்தியாவிற்கு பயணித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் இந்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
