2026 ஆம் ஆண்டு சட்டமூலத்திற்கு கோப் குழு அனுமதி

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு கோப் குழு அனுமதி

by Staff Writer 25-10-2025 | 10:38 PM


2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.