வெலிகம பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு

by Staff Writer 22-10-2025 | 2:21 PM

Colombo (News 1st) துப்பாக்கிச்சூட்டில் வெலிகம பிரதேச சபையின் தலைவர் 'மிதிகம லசா' எனப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.

இன்று(22) முற்பகல் அவர் பிரதேச சபையில் இருந்த போது அங்கு வந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட லசந்த விக்ரமசேகர வெலிகம பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

38 வயதான 'மிதிகம லசா' என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர 03 பிள்ளைகளின் தந்தையாவார்.